பயிர் பாதுகாப்பு :: வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

பனாமா வாடல் நோய் :ஃபுஸேரியம் ஆக்ஸிஸ்போரம பீசிஸ் கியூபென்ஸ

தாக்குதலின் அறிகுறிகள்:
  • முதலில், அடிப்புற இலைகளில் குறிப்பாக இலை ஓரங்களில், மஞ்சள் நிற மாற்றம் மற்றும் வாடிக் காணப்படும். பின்பு இந்த ம‌ஞ்சள் நிறம், இலையின் மையப்பகுதி வரை பரவி, ஓரங்கள் கா‌ய்ந்து போகும்.
  • பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்புடன் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்கும். இது மரத்திற்கு பாவாடை கட்டியது போல் தோற்றமளிக்கும்.
  • அடிக்கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்க்கும் போது நிற மாற்றம் வட்டவடிவில் கிழங்கின் நடுப்பகுதியில் அதாவது சாற்றுக்குழாய் தொகுப்பில் தாக்கம் அதிகளவில் இருக்கும். தண்டினை நீளவாக்கில் பிளந்து பார்த்தாலும் இந்நிற மாற்றம் தெரி‌‌யும்.
  • இந்நோய் மண்ணின் மு‌‌‌லம் பரவுகின்றது. பூஞ்சையானது மெல்லிய சல்லி வேர்களின் வழியே உட் புகுகிறது. அமில மற்றும் வண்டல் மண் வகைகளில் நோய்த் தாக்கம் அதிகம்.
  • இப்பூஞ்சைகள், கன்றுகள், கிழுங்கு, வயலில் பயன்படுத்தும் கருவிகள், வாகனங்கள், பாசன நீர் போற்வற்றின் வழியே பரவுகின்றது.
   
  அடிப்புற இலைகளில் மஞ்சள் நிற மாற்றம்   காய்ந்து இலை

கட்டுப்படுத்தும் முறை:

  • சூடோமோனாஸ் புளூரசன்ஸ் @ 2.5kg / ஹெக்டர் நுண்ணுயிர்க்கொல்லி, தொழு உரம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு கலந்து இடலாம்
  • சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ்( 60 மிகி) கேப்சூலை கிழங்கில் 10 செ.மீ ஆழமான துளை இட்டு இடவேண்டும்.
  • கார்பன்டாசிம் 50 மில்லி காப்ஸ்யூல் அல்லது 2 சதவீதம் கார்பன்டசிம் ஊசியின் மூலமாக இடவேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015